தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சங்கத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் ஏழுமலை வரவு செலவு அறிக்கைகையினை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை விரைவாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் பணியினை டெல்டா அல்லாத மண்டலங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்புற்கு ஒதுக்கீடு செய்வதை ரத்து செய்ய வேண்டும்,
திருச்சி மண்டலம் இன்டேன் எரிவாயு பிரிவில் நீண்ட காலமாக சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கக்கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு கூலி ரூ 33.43 உயர்த்தி வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களாக பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அடுத்த நிலையில் அட்டை வழங்காத பணியாளர்களுக்கு அட்டை வழங்க வேண்டும். கண்காணிப்பாளர் நிலையில் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கருணை ஓய்வூதியம் ரூ 9000/- வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டிசம்பர் மாதத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சுப்புராஜ். சண்முகம் ராஜாங்கம் கதிரேசன் மாநில செயலாளர் ராசப்பன் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.