திருச்சி செங்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது அதில் குறிப்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் எட்டாவது மாநில மாநாட்டினை தாராபுரம் கோட்டம் உடுமலைப்பேட்டையில் வரும் செப்டம்பர் 8, 9 தேதிகளில் நடத்துவது. மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதி குடும்பத்துடன் பேரணி பொது மாநாட்டை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளருக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியம் மாற்றம் ரூபாய் 5, 200 – 20,200 தர ஊதியம் ரூபாய் 1,900 வழங்க வேண்டும். சாலை பணியாளருக்கு ஆபத்து படி ஊதியத்தில் 10% வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்தை ஈட்டிடும் வகையில் கோரிக்கை முழக்க போராட்டம் தமிழ்நாடு முழுவதும் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் சாலப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனு முறையீடு வழங்கும் இயக்கத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.