தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் தர்ணா போராட்டம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார் இதில் திருச்சி கோட்ட பொறியாளர் கேசவன் அவர்களின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு போராட்டத்தை தூண்டும் கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சாலை பணியாளர்களின் முதுநிலை பட்டியல் தமிழ்நாடு சார்நிலைப் பணி அமைப்பு விதிகள் 33 .35 படி முறைப்படுத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் மேலும் கூட்டுறவே நாட்டு உயர்வு நெடுஞ்சாலை பணியாளர் சிக்கன நாணய கடன் சங்கத்தை காலி செய்து தொடர்ந்து பெரும் பொருளாதார செலவினை ஏற்படுத்தி சொசைட்டியை சீர்குலைக்கும் வகையில்
அலுவலகம் ஒதுக்கீடு செய்து தர மறுக்கும் கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து சங்கொலி எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்