தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்னை திருநெல்வேலி கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஜெரால்டு மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மாரிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.