திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலகத்தில் உள்ள புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளாக:- புள்ளிஇயல் துறை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைந்திட கூட்டுக் குழு கூட்டம் நடத்திட வேண்டும். தொழிற்நுட்ப பணியிடங்களை ஒப்படைக்க முயலும் துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும். துறையின் எதிர்காலத்தை முடக்கும் வகையிலும் ஊழியர் நலனுக்கு எதிராகவும் செயல்படும் நிர்வாகப் பிரிவு பணியாளர்கள் மாற்றப்பட வேண்டும். உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
அயல் பணிகளில் நமது திட்டப் பணியிடங்கள் அவசியம் குறித்து அரசுக்கு தெரிவித்து அப்பணியிடங்களை பாதுகாக்க வேண்டும். காலியாக வைக்கப்பட்டுள்ள கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உரிய காலத்தில் புள்ளிஇயல் உதவி இயக்குநர் குழுப்பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிடவும். பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ள புள்ளிஇயல் அலுவலர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பாரபட்சமான விதிமுறைகளால் பணிமாறுதல் கலந்தாய்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை சரிசெய்து தர வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், கோட்டங்கள், மற்றும் வட்டாரங்களுக்கு உரிய பணியிடங்கள் உருவாக்கி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்