உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அறிவியல் இயக்க கல்வி உபகுழு சார்பில் உறையூரில் இன்று நடந்தது.
விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் சிவ. வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கராசன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை போராளிகள் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நந்தலாலா வெளியிட அதனை மாநில துணைத் தலைவர், எழுத்தாளர் நீலா பெற்றுக் கொண்டார்.
அறிவியலும் சமூகமும் என்ற சிவஞானமும், சமூகப் போராளி ஒரு இரும்பு பெண்மணி என்ற தலைப்பில் சாந்தியும் பேசினர். முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் சையத் அப்துல் கரீம்வரவேற்றார். முடிவில் மாநகர தலைவர் நாகநாதன் நன்றி கூறினார்.