இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மசூதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முத்து சார் பள்ளி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமானோர் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்