வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி உலக நன்மை வேண்டியும் சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் வகையில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் 10-ம் ஆண்டு கோ பூஜை மற்றும் புனித திர்த்த வேள்வி திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடலில் இன்று காலை நடைபெற்றது. இந்த கோ -பூஜைக்கு தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிறுவனர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ரமேஷ் பரமசிவம் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூஜையில் சுவாமினி அன்னை ஸ்ரீ பஜனாந்த சரஸ்வதி கலந்துகொண்டு கோபூஜை துவக்கி வைத்து ஆசீர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வாழைப்பழம் கீரை உள்ளிட்ட பல வகைகள் வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் தனபால், சதீஷ், கார்த்திகேயன், சௌந்தர், ரவிக்குமார், மணிவேல், மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்று சென்றனர். அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான மகாபிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.