தமிழ்நாடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்கத்தின் 38வது பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற வேளாண்மை நிலை குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.குடந்தை மாநில தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சர் கே என் நேரு மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் தஞ்சை எம்பி முரசொலி,அகில இந்திய வேளாண் இடுப்பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மன்மோகன் கலண்டிரி,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பொறுப்பு தமிழ்வேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மாநாட்டில் மாநிலத் தலைவர் மோகன், மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார், ரகுராமன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநாட்டுக்குழு தலைவர் சிவகுமார் நன்றி கூறினார். முன்னதாக விவசாய கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது கண்காட்சியை வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி திறந்து வைத்தார் -மாநில செயலாளர் சத்தியமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் வர செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார் மாநாட்டில் புதிய மாநில தலைவராக சிவகுமார் செயலாளராக ரகுராமன் பொருளாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி ஏற்று கொண்டனர்.மாநாட்டில் தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 24 லட்சம் டன் உரம் விற்பனை மதிப்பு ரூபாய் 3500 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் 5% மதிப்பு ரூபாய் 175 கோடி விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இடுப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியை விளக்கு பெற மத்திய அரசுக்கு உரிய பரிந்துரை செய்ய வேண்டும்.தற்சமயம் உரத்திற்கு 5% பூச்சி மருந்துக்கு 18 சதவீதம் ஆர்கானிக் ஐந்து சதவீதம் நுண்ணூட்டம் 12 சதவீதம் என்று இருப்பதை அனைத்திற்கும் ஒரே வரியை ஐந்து சதவீதம் நிர்ணயிக்க வேண்டும். கம்பெனிகள் டீலர் கமிஷன் எட்டு சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும்.மானிய உரங்களுடன் இணை உரங்களை சேர்த்து வழங்க வேண்டும்.பூச்சி மருந்து உரிமம் பிற்சேக்கை கட்டணம் ரூபாய் 100 நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு & தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும்.கடல் தாவரத்தின் ஆர்கானிக் உரங்களை அனைத்து சிறு,குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி மண்ணை காத்திட மகசூல் பெருக்கிட வேண்டுகிறோம் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.