திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் இக்கல்லூரியின் பவள விழா ஆண்டையொட்டி புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பு உரையாற்றிய போது….. உங்கள் முன்னாள் மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக உள்ளனர் அதில் தமிழக அமைச்சரவையில் கே என் நேரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோரும் இக்கல்லூரியில் பயின்றவர்கள் என்பது பெருமை கூறியது மேலும் இக்கல்லூரியிலிருந்து பலரும் அரசியலுக்கு வருவார்கள். மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும் கல்லூரியில் இருந்து பல அரசியல் தலைவர்களை தந்துள்ளனர் திராவிட மாடல் அரசை பொருத்தவரை தமிழ்நாடு மக்களின் அதன் வளர்ச்சிக்கு அடித்தளமா இருப்பது அதுதான் அறிவுச்செல்வம் அதனால் கல்விக்கு முக்கியத்துவம் ஏராளமாகவும் திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
நமது அரசு செய்த திட்டங்கள் தங்களுக்கு தெரியும் உங்களுடைய திறன் மேம்பாட்டுக்கு நம்முடைய மாணவர்கள் உயர்ந்த இடத்திற்கும் வருவதற்கு நான் முதல்வன் திட்டம் பெரும் பங்களிப்பதாகவும் மேலும் கல்விக்கு பொருளாதார தடையாக இருக்கக் கூடாது என மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மேலும் கல்விக் கனவு வெற்றியடைவதற்கு புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் நமக்கு கல்வி எளிதாக கிடைக்கவில்லை நமது தலைவர்கள் நடத்திய சமூக நீதிப் போராட்டத்தினால் நாம் அனைவரும் இன்று பயனடைந்து வருகிறோம் மீண்டும் தமிழ்நாடு மீண்டு எடுக்க மாணவர்கள் ஒரு அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் அதேபோல இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்காக நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.
மேலும் இளைய சமுதாயத்தினர் அறிவு வளர்ச்சி கொண்டு கொண்டுச் செல்ல 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவுள்ளோம் எங்களுடைய வளர்ச்சிக்கு கல்லூரிகளும் துணை நிற்க வேண்டும் என பேசினார். விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்