திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காந்தி மார்க்கெட் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களது கடைகளையும், கடையில் உள்ள பொருட்களையும், அப்புறப்படுத்தி, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், காவல்துறையினரையும் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர், திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்கம் கணேசன் ஆகியோர்தலைமை தாங்கினர்.அவர்களை இரும்பு தடுப்புகளை கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சாலையோர தடைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளை அடையாளம் காண முறையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்த வேண்டும்.தரைக் கடை வியாபாரிகளிடம் மாமுல் வசூல் செய்யும் மாமன்ற உறுப்பினர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு சொந்தமான கடைகளையும் அதில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்திய காவல்துறையினர் மீதும் மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாநகராட்சி வளாகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது மாநகராட்சியின் பிரதான கதவு அடைக்கப்பட்டது அதற்கு முன்னால் இரும்பு தடுப்புகளை கொண்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்