திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் பெரியசாமி டவர் அருகில் உள்ள அன்னதான சத்திரத்தில் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் மாநில பொதுச்செயலாளர்கள் முரளி மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் துணைத் தலைவர் சிக்கல் சண்முகம்
கோட்ட தலைவர்கள் சிவாஜி சண்முகம் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜுபேர் பர்கத் மகளிர் அணி தலைவி ஷீலாசெலஸ் கோகிலா விஜயலட்சுமி பட்டதாரி அணி மாநில பொதுச் செயலாளர் செந்தூர் வாசன் ரஹ்மத்துல்லா உறையூர் சுந்தர்ராஜன் மீனவர் அணி தலைவர் தனபால் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பாக்கியராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.