தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாள் ஆகும். இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் , மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
. இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் பிறந்தநாளை போற்றும் வகையில் திருச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலதிட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கபட்டு வருகிறது. திருச்சி புத்தூர் அரசு விழி இழந்தோர் பெண்கள் பள்ளியில் திருச்சி மத்திய மாவட்ட இளைய தளபதி விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் சார்பில் விழிஇழந்த பள்ளி மாணவிகளுக்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.