திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தலித் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு 96 இல் வழங்கப்பட்ட பட்டாவை இரண்டாயிரத்து ஆண்டு ரத்து செய்துள்ளனர். ரத்து செய்த விசயம் இந்த பகுதி மக்களுக்கு தெரியவில்லை. மீண்டும் அந்த மக்களை அழைத்து மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு கொடுத்து உள்ளோம்.
இந்நிலையில் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் மற்றும் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்களை அழைத்து கொண்டு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை பொறுமையோடு கேட்ட அமைச்சர் அதை செய்து தருவதாக அந்த மக்களிடம் உறுதி கூறினார்.அருகில் மாநகர தலைவரும் அரியமங்கலம் கோட்டத் தலைவருமான மதிவாணன் உடன் இருந்தார்.