திருச்சி மாநகரில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டொனால்ட்ஸ் சாலை வழியாக திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் இந்த டொனால்ட்ஸ் சாலை கடந்து செல்கிறது.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தார் சாலை போடப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலையில் 10 இருக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது . மேலும் இந்தப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்தப் பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இருக்க பள்ளங்களில் மரக்கிளைகளை நட்டு வைத்துள்ளனர்.
புதிதாக போடப்பட்ட இந்த தார் சாலையில் இப்படி அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவதும் அதனை தற்காலிகமாக மூடுவதும் வாடிக்கையாகி வருகிறது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது போன்ற சாலைகளை சீர் அமைத்து தரக்கோரி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.