திருச்சி திருவரம்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் குடியிருப்போர் சங்கம், திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் திருச்சிராப்பள்ளி எழில் நகர் குடியிருப்புக்கு அருகில் மயானம் மற்றும் குளம் உள்ள பகுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வள மீட்பு பூங்கா அமைவதை இடமாற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திலிப், செயலர் யோகா விஜயகுமார், துணைத் தலைவர் தங்கமணி, எழில் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் கயாஸ் அகமது, உட்பட எழில் நகர் ஆபிஸர் டவுன் பொதுமக்கள், மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தர பாதிப்பு கழிவுகளின் துர்நாற்றம், சுகாதாரக் சீர்கேடு, தொற்றக்கூடிய நோய்களின் பரவல் உள்ளிட்ட ஆபத்து காரணிகளை எடுத்துரைத்து இடம் மாற்ற கோரிக்கை மனு அளித்தனர்.