தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் , தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி ப.குமார், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.