திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாஜக திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் சேலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளிடம் மத்திய அரசின் முன்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற்றனர். இந்நிகழ்வில் ரவிச்சந்திரன் . நிஷா ராணி சரவணன் மற்றும் பாஜக மாநில குழு, மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாஜக முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது.
தமிழக முதல்வர் பாஜகவை கண்டு பயப்படுகிறது பாஜக தலைவர் கட்சி தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட மூன்று நான்கு மொழிகளை படிப்பதை பார்க்க முடியும். அதை பாரதிய ஜனதா கட்சி நடத்திக் காட்டும். திமுக ஆட்சி 2026 வரை தான் இருக்கும் அதன் பிறகு பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமையும் என பேசினார்.