சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்துக்கு எதிராக தமிழக முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் அவர் கூறிய சார் யாரு என கேட்டு *யாரு அந்த SIR?* என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.