தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது.இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு, தேர்ச்சிபெற்ற 3192 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, உத்தேசபட்டியல் வெளியிட்டு ஓராண்டுமுடிந்தும் பணி வழங்காமல் விளம்பர திமுக அரசு பட்டதாரி ஆசிரியர்களை வஞ்சித்து வருகிறது. விடியல் தரும் என்று எண்ணி திமுகவுக்கு வாக்களித்த ஆசிரியர்களுக்கு விடியல் தர மறுப்பதை கண்டித்து, பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்ற பிப்ரவரி நான்காம் தேதியை கருப்புதினமாக அனுசரித்து
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக முழுவதும் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் 400க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து வந்த ஆசிரியர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணி தனியார் பள்ளி வேலையை உதறி வந்த ஆசிரியர்களுக்கு தற்போது வரை வேலை வழங்காத திமுக அரசால் ஆசிரியர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர் இனிமேலாவது அரசு ஆசிரியர்களின் நிலையை உணர்ந்து அவர்களின் வயதை கருத்தில் கொண்டு விரைந்து பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.