திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தையக்காரத் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் புதன்கிழமை காலை மர்ம நபர்கள் சிலர் மனிதக்கழிவை ஒரு பாலித்தீன் பைகள் எடுத்து தண்ணீர் தொட்டியில் போட்டு சென்றதாக செய்தி மற்றும் புகைப்படம் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவம் அறிந்த வார்டின் கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர் (வார்டு 20) அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் கிடந்த மர்ம பொருளை பார்த்தபோது அது பழைய சாம்பார் குருமா பொட்டலம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சங்கர் செய்தியாளரிடம் கூறுகையில்.. நீர்த்தக்க தொட்டி குடிநீருக்காக பயன் படுத்துவதில்லை மக்கள் புழங்குவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுவது எனவும் , அங்கு மனிதக் கழிவு எதுவும் இல்லை பழைய சாம்பார் குருமாவை யாரோ வீசி சென்று உள்ளனர் என தெரிய வருகிறது எனவும், தொடர்ந்து எனது அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் போட்டு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து சென்றனர் எனவும் மேலும் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினர் குறிப்பாக சோமு என்பவர் இதுபோன்ற தவறான தகவலை பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்..