திருச்சி பொன்னகர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயரும், திமுக மாநகர செயலாளருமான அன்பழகன் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி தலைமை கழக பேச்சாளர் சீனி விடுதலை அரசு தலைமை கழக இளம் பேச்சாளர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகரம், பொன்னகர் பகுதி திமுக இளைஞரணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.