திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பட்டாக்களை பெறுவதற்காக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் காட்டூர் பகுதி 43 வது வார்டு கலைஞர் சிலை திருவள்ளுவர் நகர் கலைஞர் தெரு பகுதியில் உள்ள 100 குடியிருப்புகளுக்கு பட்டாவும், அதேபோல் எழில் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிடவும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று மதியம் 12 மணி அளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக பயணிகள் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்திருந்தனர் 2 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த பயனாளிகள் மற்றும் பொது மக்கள். அதிலும் நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடுவதற்காக அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவிகள் நீண்ட நேரம் அமைச்சருக்காக காத்திருந்து ஒருவர் மீது ஒருவர் படுத்து உறங்கினர்.
அரசு நிகழ்ச்சியில் பயனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்காக கடந்த இரண்டு மணி நேரமாக சிறுவர்கள் வயதான முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நீண்ட நேரமாக காத்திருந்த அவல நிலை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.