கோவையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் “ஓகே பாஸ்” (OK BOZ) சூப்பர் செயலி, இப்போது திருச்சியிலும் துவங்கியது. இச் செயலியின் துவக்க விழா இன்று திருச்சி தென்னூர் ஷான் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி BNI நிர்வாக இயக்குனர் உறுப்பினர் ஜஹாங்கீர் அகமது, OK BOZ நிறுவனர் செந்தில் குமார், திருச்சி franchise உரிமையாளர்களான பிரசன்ன பாபு, இப்ராஹிம், அப்துல் ரசாத் மற்றும் சுரேஷ் குடும்பத்தினர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்க விழாவை சிறப்பித்தனர். 65+ சேவைகள் ஒரே செயலியில்! “ஓகே பாஸ்” ஒரு முழுமையான சூப்பர் செயலி ஆகும். டாக்ஸி, ஆட்டோ, உணவு, மளிகை பொருட்கள், தண்ணீர் கேன்கள், வீட்டு சேவைகள், பியூட்டி பார்லர், மெக்கானிக், டைலர், கணினி சேவை உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட சேவைகள் இந்த செயலியில் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் இந்த செயலியின் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை வீட்டிலிருந்தே மிகச் சுலபமாகப் பெற முடியும். உதாரணமாக, ஒரு வீட்டிற்கு ஏசி மெக்கானிக் தேவைப்பட்டால், அருகிலுள்ள நபரே குறுகிய நேரத்தில் வந்து குறைந்த கட்டணத்தில் சேவை செய்வார். மேலும், வீடியோ கால் மூலமாக மருத்துவர், வழக்கறிஞர், ஆடிட்டர், ஜிம் ட்ரெய்னர், குழந்தைகள் டாக்டர் உள்ளிட்ட நிபுணர்களை நேரடி ஆலோசனைக்காக அழைக்க முடியும். சேவை தொழில்களுக்கு புதிய வாய்ப்பு பியூட்டி பார்லர், டைலரிங் போன்ற சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு இந்த செயலி புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. OK BOZ செயலியில் சேரும் நபர்கள் அனைவரும் வெரிபைட் செய்யப்பட்டவர்கள் என்பதுடன், SOS (அவசர அழைப்பு) வசதியும் இதில் உண்டு.

தொடக்க சலுகை – ரூ.1 டாக்ஸி இது ஒரு அறிமுக சாலையாக, திருச்சி மக்களுக்கு ரூ.1-க்கு டாக்ஸி பயணம் வழங்கப்படுகிறது, இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செந்தில் குமார் கூறியதாவது:‌ “இந்த செயலி இந்தியாவில் முதன்முறையாக சேவை தொழிலாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் செயலி, தற்போது திருச்சியிலும் மக்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் பிராஞ்சைஸ் மாடலில் விரிவடைய திட்டமிட்டுள்ளோம். ஊரில் இருந்தபடியே சேவை தொழில் செய்ய விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்.” இந்த விழாவில் பிரதீப் குமார் சிவசங்கர் மற்றும் திருச்சி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்