திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை தடுத்துநிறுத்த முற்பட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆடு திருடர்கள் என்பதை உணர்ந்து அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார். அப்போது களமாவூர் ரயில்வே கேட் பகுதி பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் ஆடு திருடர்களின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுநதுள்ளனர்.
பின்னால் வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆடு திருடன் ஒருவனை பிடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்ற ஆடு திருடர்கள் தங்களிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்களால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உடலை வைத்துள்ளனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்தது குறித்து திருச்சி போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சப் இன்ஸ்பெக்டரை படுகொலை செய்த ஆடு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.