திருச்சி காஜாமலை பகுதியில் மத்திய சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது இந்த சேமிப்பு கிடங்கு சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த கிடங்கில் 19 லட்சத்து 50 ஆயிரம் ரேசன் அரிசி மூட்டைகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது இந்த கிடங்கில் இன்று மதியம் 2 மணிக்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தக் கிடங்கிற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மழை பெய்தால் அந்த மழை நீர் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான கிணறு ஒன்றுதான் இருக்கிறது அதனை மேம்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விஷ பாம்புகள் விஷப் பூச்சிகள் உள்ளிட்டவை மக்களுக்கு தொந்தரவு செய்வதாக எம்பி துரை வைகோவிடம் புகார் தெரிவித்தனர் அதின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொக்கையா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் வெள்ளமண்டி சோமு புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.