விவசாயிகளுக்கு வழங்கிய RBI உத்தரவு-வை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்க வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவிப்பு ஆணையின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிணைய கடன்களை ரூ.1.60 இலட்சம் இருந்து ரூ. 2 இலட்சமாக உயர்த்தியதை நிறைவேற்ற கோரியும், இதற்காக எந்தவிதமான ஜாமீனும் வேண்டியது இல்லை என்பதையும் RBI கூறியதை ஏற்றுக்கொண்டு அனைத்து வங்கிகளும், கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள RBI-யை முற்றுகையிட்டு நுழை வாயில் கேட்டை பூட்டி போராட்டம் நடத்தியதால் தான் உத்தரவு நகல் கையில் வழங்கப்பட்டது. தற்போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்கு வருடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம் எங்கள் கோரிக்கையை ஏற்று வருகிற 29ஆம் தேதி அனைத்து வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடத்துவது என தெரிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் எங்கள் கோரிக்கை எட்டப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக திருச்சியில் உள்ள வங்கிகளை பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.