தமிழகத்தில் செயல்படும் அரசு மதுபான கடையில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க கியூ ஆர் கோடு பில்லிங் முறையை கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது, அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபான கடையில் க்யூ ஆர் கோடு முறையிலான மதுபான விற்பனை கடந்த 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் க்யூ ஆர் கோடு மூலம் விற்பனை செய்வதால் குடிமகன்கள் கேட்கும் மது வகைகள் கிடைக்காமல் அவதியுற்று வந்தனர்.

குறிப்பாக போலி மது பாட்டில்களை ஒழிப்பதற்காகவும், மதுபான கடையில் ஒரு பாட்டிலுக்கு அதிக விலை விற்பதை தடுப்பதற்காகவும் இந்த க்யு ஆர் கோடு முறை கொண்டு வந்த நிலையில், திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமுளூர் பகுதியில் உள்ள 10329 அரசு மதுபான கடையில் க்யூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் முறையில் விற்பனை செய்யும் போது ஒரு குவட்டருக்கு 5 ரூபாய் அதிகமாக வசூல் செய்கிறார்கள். எதற்காக 5 ரூபாய் வசூல் செய்கிறார்கள் என்று மதுபான பிரியர்கள் கேள்வி கேட்டால் மதுபான பாட்டில்கள் கடையில் லாரியில் இருந்து இருக்கும் போது கூலி யாரிடம் கேட்பது, உங்களிடம் தான் வாங்க முடியும் என பகிரங்கமாக பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல், மதுபான பிரியர் கூறும்போது…. ஒரு குவட்டருக்கு 5 ரூபாய் என வசூல் செய்கிறார்கள் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட குவட்டருக்கு மேல் மதுபாட்டில்கள் விற்பனை ஆகிறது, அது எங்களிடமே ஒரு குவட்டருக்கு 5 ரூபாய் என வசூல் செய்கிறார்கள் இதை யாரிடம் கேட்பது எதற்காக இந்த ஸ்கேன் மற்றும் க்யூ ஆர் கோடு முறை கொண்டு வந்தார்கள் என மதுபான பிரியர் வேதனையுடன் தெரிவித்தனர். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறுவது தவிர்ப்பதற்காக கொண்டு வந்த இந்த க்யூ ஆர் கோடு முறை தமிழக அரசு கொண்டு வந்த நிலையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று அதிக பணம் வசூல் செய்யப்படுகிறதோ என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *