தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கல் விழாவை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்கள். திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி மையத்திற்காக அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கங்காதரணி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், மற்றும் அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் விளையாட்டு பிரிவை சேர்ந்தார் மாணவ, மாணவிகள் மற்றும் எலந்தப்பட்டி கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது…. ஒலிம்பிக்க அகாடமி மையம் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த இடத்தில் அமைகிறது. இதற்கான அடிக்கலை ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நாட்டியுள்ளார். இந்த நிலையில் இந்த ஒலிம்பிக் அக்காடமி ஒன்று பகுதி இரண்டு என இரண்டு பகுதியாக நடைபெறுகிறது இந்தப் பணி 18 மாதத்தில் நிறைவடையும் இந்த பணி தொடங்கியுள்ளது. என்பதை சுற்றுவட்ட பகுதிக்கு மக்களுக்கு தெரிவிப்பதற்காக தற்பொழுது இப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இங்கு எல்லாவிதமான விளையாட்டுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கே.என்.நேரு கூறினார்.