கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் முன்பு திடீரென வாலிபர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அடிப்படையில் சம்பவம் இடம் வந்த ரயில்வே போலீசார் மற்றும் திருச்சி கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த 24வயது பிரேம்குமார் என்ற இளைஞர் என்பவர் ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தால் ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதமாக ஜங்ஷன் ரயில் நிலையம் சென்றது. இந்த ரயில் மீண்டும் கரூருக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட உள்ளது இதனால் பயணிகள் தவிப்பு. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…