திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.