இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். தக்காளி விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் அனைத்து தக்காளியும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.