திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் என்று குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று பிறகு போது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடந்தது.
இந்த ஏலத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் ஆம்னி வேன் கார்கள் என 4 – நான்கு சக்கர வாகனங்களும்,
டிவிஎஸ் 50, ஸ்கூட்டி விலையுயர்ந்த பைக்குகள் என 199 – இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 203 வாகனங்கள் மைதானத்தில் ஏலத்திற்காக வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஏலம் தொடர்பாக காவல்துறை சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை முதல் ஏலம் எடுப்பவர்கள் 2000 பணம் கட்டி ஏலத்தில் வாகனங்களை எடுத்துக் கொள்வதற்காக மைதானத்தில் குவிந்தனர்.