தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்து வந்தனர் – இந்நிலையில் கலந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு பின்னர் பரவலாக மிதமான மழை பதிவானது – மண்ணச்சநல்லூர் முசிறி சமயபுரம் நம்பர் – 1 டோல்கேட் , நொச்சியம் போன்ற பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் உளுந்து மற்றும் எல் விவசாயிகள் இந்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இருந்த போதிலும் லட்ச கணக்கில் முதலீடு செய்து வாழை விவசாயத்தில் ஈடுபட்ட வாழை விவசாயிகள் சூறைக்காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் ஏராளமான இடங்களில் முறிந்து விழுந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.