திருச்சி மரக்கடை பகுதியில் 27 ஆண்டுகள் பழமையான எம்.ஜி.ஆர் சிலையின் கை பகுதி நேற்று உடைந்து விழுந்தது. மர்ம நபர்கள் யாரேனும் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, பத்திரிக்கையாளர்களை அழைத்து எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது மர்மநபர்கள் இல்லை என்றும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த போது தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டன.மரக்கடை பகுதியில் உள்ளமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலையும் மூடப்பட்டது.தேர்தல் நடத்தை விதி முறைகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து அந்த சிலையிலிருந்த துணி அகற்றப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலையின் கை பகுதி உடைந்தது.27 ஆண்டுகள் பழமையான சிலை என்பதால் அது உடைந்திருக்கலாம்.அந்த சிலை சேதத்திற்கு எந்த விஷமிகளும் காரணமல்ல.அரசு செலவில் அந்த சிலை விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை மரக்கடை பகுதிகளில் சேதமடைந்த எம்ஜிஆர் சிலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் கட்சியினர் பார்வையிட்டனர்.