தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் திட்டம் ,நம்மைக் காக்கும்– 48 திட்டத்தினன காணொளி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது விபத்தில் காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வசதியுடன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள எந்த ஒரு மருத்துவ மனையாக இருந்தாலும் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர் அவர் அனுமதிக்கப்பட்ட நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முழு செலவையும் அரசே ஏற்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர் வறுமை கோட்டிற்கு கீழேயும், வறுமைக் கோட்டிற்கு மேலே இருக்கலாம். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இத்திட்டம் அவருக்கு பொருந்தும்.
அந்த வகையில் திருச்சி காணொலிக் காட்சி வாயிலாக கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்து கொண்டார். தமிழக முதல்வர் துவங்கி வைத்த இந்த திட்டத்திற்கு நன்றி கூறினார். இந்நிகழ்வில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை தலைவர் வனிதா, காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சிவராசு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
பள்ளி கட்டிடம் இடிந்து நெல்லை மாவட்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற 48 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேதமடைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடங்களை அகற்றவும் Notice கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது பொதுப் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை 24 மணி நேரத்தில் அகற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
பள்ளி வகுப்பறை, உணவுக்கூடம், கழிப்பறைகள் என சேதமடைந்த கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் அகற்றப்படும். சேதமடைந்த வகுப்பறைகளில் கண்டிப்பாக பாடம் நடத்த கூடாது. சேதமடைந்த வகுப்பறைகளை மூட வேண்டும். ஏற்கனவே பொதுப்பணித்துறையிடம் கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 85 கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது.