திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ராக்டவுனின் 50வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் அசோக்ராஜ், மண்டலத்துறை தலைவர் பொறியாளர் கஜேந்திரன், கல்லூரியில் விரிவாக்கத்துறை முதன்மையர் முனைவர் ஆனந்த்கிதியோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து ஜூனியர் சாம்பியன் இன்டர்நேஷனல் தலைவராக முனைவர் ஜெபாஸ்டின் சுதாராஜா பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் புதிய தலைவருக்கு மண்டல தலைவர் மற்றும் மண்டல ஆட்சி மன்ற குழுவினர் முன்னிலையில் தலைமை பொறுப்பை ஒப்படைத்தனர். தொடர்ந்து 16வது ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் முனைவர் பெட்ரிட்டிஷ் ஜான்சிராணி, முனைவர் கிப்ட்ஸன்மேத்யூ மற்றும் முனைவர் புஷ்பாரெஜினா உட்பட பலர் பங்கேற்றனர்.