திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் “டர்ஃப் 1 ஜீரோ” என்ற புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, டர்ஃப் 1 ஜீரோ மைதானத்தின் நிறுவனர்கள் பிருதிவி ராஜ், ஆஸ்கார் ரூபன், கிஷோர், பலானி, பிரசாத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மைதானத்தில் திறப்பு விழா சலுகையாக, இந்த மாதம் முழுவதும் எல்லா முன்பதிவுகளுக்கும் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள் விளையாட காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ₹.799 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ₹.1099 என சிறப்பு சலுகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட், ஜூம்பா, குறுக்கு பொருத்தம், வலிமை பயிற்சி, வில்வித்தை, யோகா போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. கால்பந்து பயிற்சிக்கு மாதம் ₹.2000 வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு 7603812109 – 7904389060 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்