திருச்சி கே கே நகர் சபரி மில் பஸ் ஸ்டாப் அருகே மிக பிரம்மாண்டமாக டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இந்த டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த டைட்டானிக் கப்பல் போன்ற பிரம்மாண்ட வெளி தோற்றமும், உள்ளே நுழைந்த உடன் டைட்டானிக் படத்தில் வரும் கப்பலில் போன்று உள் தோற்றமும் டைட்டானிக் படத்தில் நடித்த ஹாலிவுட் ஸ்டார்கள் அடங்கிய படங்கள் செட்டுகளில் வைக்கப்பட்டுள்ளது
மேலும் சிறிய வகை டைட்டானிக் கப்பல் மற்றும் கண் கவரும் ரோபோட் நாய் அடங்கிய செட்டுகள், குழந்தைகளுக்கு உண்டான பிளாஸ்டிக் சாமான்கள், பெண்களுக்கு உண்டான வளையல் லிப்ஸ்டிக் போன்ற சாதனங்கள் அடங்கிய கடைகள் மற்றும் பேய் பங்களா, ராட்சச ராட்டினம், டிராகன், குழந்தைகள் அமர்ந்து விளையாட கூடிய ராட்டினங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் உள்ளே வந்தால் சுமார் 2 மணி நேரம் மன நிறைவுடன் சுற்றி பார்த்து திருப்தியாக செல்லக்கூடிய அளவிற்கு டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி பத்ரி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது