இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவர், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், துணைச் செயலாளர்கள் வனிதா, ஜாக்குலின், பகுதி கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.