அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே-தின பொதுக்கூட்டம் கீழப்புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த மே தின பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாசலம், அதிமுக கழகப் புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன் பேசுகையில்:- வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்பே அறிவித்து விட்டோம் ஆனால் திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் மு க ஸ்டாலின் அவர்களா அல்லது உதயநிதி ஸ்டாலின் அல்லது அவரது மகன் இன்பாநிதியா? என்ற குழப்பம் நிழவி வருகிறது. அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்த பல்வேறு நல்ல திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டில் அத்தனை பேன்கள் இருந்தும் ஒரே ஒரு ஃபேன் மட்டும் ஓடுகிறது. நீங்கள் மட்டும் ஏசியில் செல்கிறீர்கள் நோயாளிகள் வெயில் காலத்தில் இப்படி கஷ்டப்படுகிறார்கள் அதற்கு தீர்வு கான முடிந்ததா? இதன் மூலம் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.