திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தேவர் ஹாலில் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ஆணழகன் சங்கம் இணைந்து “மிஸ்டர் ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை திருச்சி மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மிஸ்டர் இந்தியா பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார். 11 பிரிவுகளில் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 150 வீரர், வீராங்கனைகள் தங்கள் கட்டுடலை காட்டி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 70 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற ஆண்கள் தங்களது உடல் கட்டை பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு அசைவுகளின் மூலம் எடுத்துக்காட்டி பிரமிக்க வைத்தனர். இதில் 21 வயது கிருபாகரன் என்ற இளைஞர் மிஸ்டர் 2025 ஆக தேர்வு செய்யப்பட்டார். அதே போல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பெண்கள் தங்கள் கட்டுமஸ்தான உடலை காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

புகையிலை, சிகரெட், மது போன்றவற்றால் ஏற்படும் உடல் தீமைகளில் இருந்து உடற்பயிற்சி செய்து உடல் நலனை பேணி காப்பதன் முக்கியத்துவத்தையும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசுக்களை வழங்கினார். அருகில் சிறும்பான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மொய்தின், மாநிலத் தலைவர் அரசு, ஐசிஎப் மாநில செயலாளர் பாலமுருகன், பொருளாளர் பட்டுக்கோட்டை சரவணன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்