அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்தின் போது திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர் . அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களை பெண் காவலர் எஸ்.ஐ சுஜாதா பேரிக்காடு கொண்டு தடுத்து நிறுத்த முற்பட்டார். அப்போது இந்த தள்ளுமுள்ளுவின் போது பேரிகார்டின் இரும்பு தகரம் அவரது வலது கை முட்டி பகுதியை கிழித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக தனது கைக்குட்டை மூலம் ரத்தத்தை துடைத்து கொண்டார் இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.