டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓவிய மாணவர்களுக்கு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 140 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வரும் நான்கு ஓவியங்களை வரைந்து அதனை காட்சி படுத்தினார்கள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் டிசைன் ஓவிய பள்ளி சார்பில் நடைபெற்று வரும் இந்த ஓவியக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியினை முதல்வர் நசரத் ,ஓவியர் சிவபாலன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

 

ஓவியங்கள் பல்வேறு வகையான எண்ணெய் ஓவியம் (Oil painting) ,வண்ணக்கோல்(Pastel painting) , செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting),நீர்வர்ண ஓவியம்(Watercolor painting), மை ஓவியங்கள் (Ink Painting), பூச்சு ஓவியங்கள் (Enamel painting) என வண்ண கலவை பகுதியில் கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர். பெண் வன்கொடுமை எதிர்ப்பு,விவசாயம், வனவிலங்கு பாதுகாப்பு, கல்வி ,அறிஞர்கள் , இயற்கை உள்ளிட்ட தொடர்பான ஓவியங்கள், வேலு நாச்சியார், காந்தி மருதுபாண்டியர் அழகுமுத்துக்கோன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியானது 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளுடன் ஓவியங்கள் ஓவியம் வரையும் முறை குறித்து இங்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு, விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

இந்த ஓவியங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் ஆங்காங்கே பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் இந்தியா வழங்கப்பட உள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்