திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 830 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் வழியாக மதுரை சேர்ந்த புலிவழத்து ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளை மாடுபிடி வீரர்களை தாண்டி சென்ற வேகத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டளை மேடு வாய்க்காலில் தவறி விழுந்தது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் குறைந்த அளவே சென்றதால் காளையின் கால் முறிந்து உயிருக்கு போராடியது..
இது குறித்த தகவல் அறிந்து வந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை அதிகாரி கதிர்வேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்த ஜல்லிக்கட்டு காளையை வாய்க்காலில் இருந்து காப்பாற்றி சிறிது நேரத்திலேயே காளை துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஜல்லிக்கட்டு காளை இறந்த தூக்கம் தாங்காமல் காளையின் உரிமையாளர் கதறி அழுதார். மேலும் அங்கிருந்த பொது மக்கள் வருத்தத்துடன் இறந்த காளையை பார்த்துக் கொண்டிருந்தனர்..