மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் அந்தந்த வார்டு பகுதிகளில் மேயர் துணை மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் 27-வது வார்டு சங்கீதபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதி, சமுதாயக்கூடம், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை அகற்ற வேண்டும், நாய்கள் கருத்தடை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை வேண்டி என மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து 27 -வது வார்டுகளில் உள்ள மக்களிடம் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வட்டச் செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.