ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந் வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. தமிழகத்தில் சென்னை உட்படப் பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் மேலும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடமான காவேரி பாலத்தில் இளைஞர்கள் ,பெண்கள் மற்றும் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மக்கள் குடும்பத்துடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் எந்த ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *