அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பங்கேற்று மாவட்ட கழகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:- . கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணத்தால் பெண்கள் ஸ்டாலினுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது .அதனை முதலில் களைய வேண்டும். ஆபரேஷன் இல்லாமல் வைத்தியம் பார்க்க முடியாது. நாங்கள் அனைவரும் இணைந்து தான் ஒருமனதாக எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி பதவி தரப் போகிறோம் . கண்டிப்பாக நாம் (அதிமுக) வெற்றி பெறுவோம்.
இந்த கள ஆய்வு கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், வழக்கறிஞர் ஜெயராமன், நிர்வாகி எனர்ஜி அப்துல் ரகுமான், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான், மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.