தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என இப்பகுதி 54 வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்தனர். மேலும் இந்த பேரணியை அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்க வேண்டும் என அவருக்காக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காலையில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட நேரமாக நின்று கொண்டு காத்திருந்தனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் தொலைபேசி வாயிலாக கவுன்சிலர் புஷ்பராஜை அழைத்ததற்கு வந்து விடுகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்தார். நீண்ட நேரமாக மாணவ மாணவிகள் வெயிலில் காத்திருப்பதை கண்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர் புகைப்படம் வீடியோ எடுப்பதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை நிழலில் அமரும்படி கூறினர். இந்நிலையில் கவுன்சிலர் புஷ்பராஜ் தான் வரவில்லை என தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் இந்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குறிப்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளில் நடந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் வருகிறேன் எனக் கூறி வராமல் மாணவ மாணவர்களே நீண்ட நேரம் வெயிலில் காக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவத்தை கண்ட பெற்றோர் கூறுகையில்:- 54 வயது வார்டு கவுன்சிலராக இருக்கும் புஷ்பராஜ் அவருக்கு பல்வேறு பணிகள் இருக்கும் ஆனால் முன்கூட்டியே தான் பேரணியை தொடங்கி வைக்க வர முடியவில்லை என கூறி இருந்தால் மாணவ மாணவிகள் இப்படி நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க அவசியம் இருந்திருக்காது என பெற்றோர் வருத்தம் தெரிவித்தனர்.