திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர் அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மண்டல துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயி அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தனர் மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலப்பரப்பை வேளாண்மை துறை, புள்ளியல்துறை, வருவாய் துறை மூலம் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க கோரினர்.
மேலும் இது குறித்து விவசாயி அயிலை சிவசூரியன் பேட்டியில் அளிக்கையில்:-திருச்சி மாவட்டம் முழுமைக்கும் 14 பிளாக்கில் F1 விதை உளுந்து ரகம் வம்பன் 8, வம்பன் 10 விவசாயிகளுக்கு தை பட்டத்தில் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க மையம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. வம்பன் ரகம் புதுக்கோட்டை வம்பன் ஆராச்சி மையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ரகம் இந்த ரகம் பெரும்பாலும் மானாவாரி விவசாய உற்பத்திக்கு உகந்த செம்மன் மற்றும் சரளை மண் போன்ற விவசாயப் பகுதியில் சாகுபடிக்கு உகந்தது களிமண் மணல் வண்டல் மண் போன்ற பகுதியில் விதைக்க உகந்த ரகம் கிடையாது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 75 டன் விதை 14 பிளாக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மணிகண்டம் பிளாக்கில் 5 டன்னும் அல்லித்துறை வேளான் மையம் மூலம் 2 % டன் விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது. அரசு வேளாண் மையம் மூலம் வம்பன் 8 வம்பன் 10விதை பெற்று விவசாயம் செய்த 90% விவசாய நிலப்பரப்பு மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் மகசூல் வருவாய் இழந்துள்ளனர். இந்த நோய் வெள்ளை ஈ மூலம் பெருவாரியாக பரவுவதாக வேளாண்மை துறை கிராம விவசாய கூட்டம் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்சி மூலம் தெரிவித்தும் கட்டுப்படுத்த சரியான மருந்து இல்லை. விவசாயிகள் கிலோ 80 ரூபாய் வீதம் வேளான் விரிவாக்க மையத்தில் ஏக்கருக்கு 10 கிலோ விதை பெற்று உயிர் உரம் விதை நேர்த்தி செய்து
விதைத்து பயிர் வளர்ந்து பூக்கும் தருணத்தில் மஞ்சள் தேமல் நோய் பாதிக்கப்பட்டு தாங்கள் மகசூல் பாதிப்பை சந்தித்து உள்ளனர். ஒவ்வொரு பிளாக்கிலும் ஒரு AD மற்றும் உதவி விதை அலுவலர் ASO மற்றும் SO மற்றும் AAO மற்றும் மூன்று வருவாய் கிராமத்திற்கு ஒரு AD வேளாண் அதிகாரிகள் அரசால் நியமிக்கப்பட்டும் அந்த பகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட விதை தேர்வு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் நிலங்களை பார்வையிட்டு சரியான முறையில் விதை கொள்முதல் செய்து இருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. விவசாயப் பகுதிக்கு உகந்த விதை தேர்வு பதிவு செய்து வழங்கவில்லை வரும் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் உளுந்து விதை தேர்வு விவசாயிகளிடம் விதை கொள்முதல் செய்யாமல் மொத்தத்திற்கும் வம்பன் ரகத்தை தவிர்த்து ஆடுதுறை ஆராச்சி மையம் (அல்லது) கோவை வேளாண் ஆராச்சி மையம் மூலம் வெளியிடப்பட்ட புது ரகங்களை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுகிறோம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் துறை, வேளாண் துறை, புள்ளியல் துறை மூலம் சரியான பாதிப்பினை அளவீடு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் மேலும் உளுந்திற்கான இன்சுரன்ஸ் காப்பீடு செய்ய வரும் காலங்களில் அரசு போதிய நிதி ஒதுக்கி விவசாயிகள் காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டுகிறோம்.